×

விமான நிலையங்களில் சுமார் 300 காலிபணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு: இந்திய விமான நிலைய ஆணையம் அறிவிப்பு

சென்னை: விமான நிலையங்களில் ரூ.31,000 முதல் ரூ.1,40,000 வரையிலான ஊதியத்தில் பல்வேறு பணிகளில் சேர ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விமான நிலைய ஆணையத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. அதன்படி, 6 பதவிகளுக்கு சுமார் 300 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை உதவியாளர் பதவிக்கு 9 காலி இடங்களும், மூத்த உதவியாளர் பதவிக்கு 9 காலி இடங்களும் உள்ளன.

மேலும், பொது பிரிவில் இளநிலை அதிகாரி பதவிக்கு 237 காலி இடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இளநிலை நிதி அதிகாரி பதவிக்கு 66 காலி இடங்கள், தீயணைப்பு பிரிவில் இளநிலை அதிகாரி பதவிக்கு 3 காலி இடங்கள், சட்டப் பிரிவில் இளநிலை அதிகாரி பதவிக்கு 18 காலி இடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை அதிகாரிக்கு குறைந்தபட்சம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை உதவியாளருக்கு குறைந்தபட்சம் ரூ.36,000 முதல் ரூ.1,10,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இளநிலை உதவியாளருக்கு குறைந்தபட்சம் ரூ.31,000 முதல் ரூ.92,000 வரை மாத ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளில் சேர ஆன்லைனில் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய ஆணையத்தின் www.aai.aero என்ற இணையதளத்தில் இதற்காக விண்ணப்பிக்கலாம்.

The post விமான நிலையங்களில் சுமார் 300 காலிபணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு: இந்திய விமான நிலைய ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Airports Commission of India ,Chennai ,Dinakaran ,
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...